Header Ads



இந்தியாவில் திருட்டில் ஈடுபட்ட 4 இலங்கையர்கள் கைது, குடிசைகளில் தங்கியிருந்து கைவரிசை - 46 இலட்சம் ரூபா மீட்பு


டெல்லி மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் தற்காலிக குடிசைகளில் தங்கியிருந்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட நான்கு இலங்கைத் தமிழர்களை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


அத்துடன் கைதான ஒருவரிடமிருந்து 46.5 இலட்சம் இந்திய ரூபாவை இந்திய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


காவல்துறை அதிகாரி மந்தீப் சிங் சித்து கூறுகையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தெற்கு டெல்லியின் மதங்கிர் கொலனியை தளமாகக் கொண்டு 'தக் தக்' என்ற கும்பலாக செயல்பட்டு வந்த குழு கைது செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இன்று (12ஆம் திகதி) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


சந்தேகநபர்கள் பெருமளவிலான பணத்தைத் திருடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், பாதுகாப்புப் படையினரிடமிருந்து தப்பிக்க கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதை அவர்கள் தவிர்த்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சந்தேகத்தின் பேரில், தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த முருகன், உத்தரபிரதேச மாநிலம் மாதங்கிர் கொலனியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சுரேஷ் மற்றும் புதுடில்லியைச் சேர்ந்த சுரேஷ் என்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சண்டிகரில் கடந்த டிசம்பர் 29-ம் திகதி மோட்டார் வாகனத்தில் பணம் திருடப்பட்ட சம்பவத்திலும் சந்தேகநபர்கள் ஈடுபட்டதாக தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.  ibc

No comments

Powered by Blogger.