பங்களாதேஷூக்கு 3 மாதங்களில் கடன் வழங்கிய சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு பின்னர் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்ட பங்களாதேஷூக்கு சர்வதேச நாணய நிதியம் முதலாவது கடன் தவணையை இன்று -31- விடுவித்தது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்டது.
பங்களாதேஷ் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி IMF-உடன் அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
பங்களாதேஷூக்கு 4.7 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று அறிவித்தது.
அதன் முதலாவது தவணையாக 476 மில்லியன் டொலர் விடுவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment