என்னிடம் மோட்டார் சைக்கிள் கூட இல்லை, மாமரங்கள் நட்டுள்ளேன் - மைத்திரிபால
இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அதிபர், நட்டஈட்டை செலுத்தும் திறன் தமக்கு இல்லாததால் மக்களிடம் பணம் வசூலிக்க தீர்மானித்ததாக தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
10 கோடி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 10 கோடி கொடுக்க எனக்கு பண பலம் இல்லை. மக்களிடம் 10 கோடி வசூலிப்பேன் என்று நம்புகிறேன். என்னிடம் மோட்டார் சைக்கிள் கூட இல்லை. எல்லா இடங்களிலும் பணம் வசூலிக்க வேண்டும். நான் பணத்தை கொடுக்கவில்லை என்றால், நான் சிறைக்கு செல்வேன்."
“நாங்கள் சகோதரர்களாக இருந்தாலும் டட்லி சிறிசேனவின் தொழிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.எங்கள் குடும்பத்தில் 11 பேர் உள்ளோம்.எனது தந்தைக்கு 05 ஏக்கர் நெற்பயிர் காணியும் 03 ஏக்கர் மேட்டு பரப்பு காணியும் இருந்தது.அந்த 5 ஏக்கர் காணி எனது சகோதரிகளுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று ஏக்கர் நிலத்தில் மாமரங்கள் நட்டுள்ளேன்.வேறு வருமானம் இல்லை என தெரிவித்தார். Tamil w
நாட்டின் சனாதிபதியாக பதவி வகித்தவர் மிகவும் பஞ்சத்தில் வாழ்கின்றார். இவரைப் பிடித்து சீஐடியிடம் ஒப்படைத்து நல்லமுறையில் மூன்று நாட்கள் கவனித்தால் களவாடிய, இலஞ்சமெடுத்த கொன்டக்ட் கொமிசன் என கோடிக்கணக்கில் அடித்த அத்தனை கோடான கோடி டொலர்களும் வௌிவரும். இவரை புலனாய்வு சரியான முறையில் கவனிக்க வேண்டும். அந்த சமுதாயப் பணியை யார் மேற்கொள்வார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete