2 மாதங்களில் அரசாங்கத்தை அமைப்போம்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் அரசாங்கத்தை அமைக்க போவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் கலாவெவ தொகுதியின் அதிகார சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மாத்திரம் தயாராக இருக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை பெற்று நாட்டை கட்டியெழுப்பவும் தயாராக இருக்கின்றது.
தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தவில்லை என்றால் போராடியேனும் தேர்தலை பெற்றுக்கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலவில் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்தை அமைப்போம். அதன் பின்னர் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment