Header Ads



பாராளுமன்றத்தை வீடியோ செய்த தமிழ், முஸ்லிம் என 2 பேர் கைது


பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த இருவர் இன்று (29) மாலை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்  என்றும் மற்றையவர் முஸ்லிம் இளைஞர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


சந்தேகநபர்கள் இருவரும்  பாராளுமன்ற மைதானத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியின் ஊடாக தியவன்னா ஓயா பகுதிக்கு  வந்து, அங்கிருந்த மரங்களுக்கு மத்தியில் இருந்து பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை வீடியோ எடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தலங்கம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 comment:

  1. அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் எந்த இடங்களையும் கட்டடங்களையும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது இந்த கழுதைகளுக்குத் தெரியாதா? அல்லது வேறு ஏதாவது நோக்கங்களுக்காக போடோ எடுத்துள்ளார்களா என்பதை கட்டாயம் பாதுகாப்புத் துறை விசாரிக்கும். அடுத்த அம்சம் அந்த இடங்களில் எல்லாம் மறைமுகமாக கெமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. எனவே எதனையும் மறைவாகச் செய்யலாம் என யாரும் நினைக்கக்கூடாது. யாரும் முதலில் சட்டத்தை மதித்து நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.