துவிச்சக்கர வண்டியில் இலங்கை முழுவதையும் சுற்றிய 2 இளைஞர்கள் - பயங்கரமான மிருகங்களைச் சந்தித்ததாக தெரிவிப்பு
பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும் ஒன்பது நாட்களில், வட்டப் பாதையில் தனியாகப் பயணம் செய்துள்ளார்.
தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பழுகாமத்தில் ஆரம்பித்து 1299 கிலோமீற்றர் பயணம் செய்து, மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இடத்திலே அவரது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
பாலச்சந்திரன் நிரோஜன் பயண விபரங்களாவன:
முதலாம் நாள் மட்டக்களப்பின் பழுகாமத்திலிருந்து 123கிலோமீற்றர் பயணம் செய்து, திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவரைக்கு சென்று, இரண்டாம் நாள் அங்கிருந்து 154கிலோமீற்றர் தூரம் பயணித்து முல்லைத்தீவிற்கு சென்றுள்ளார்.
9ஆம் நாள் 25ஆவது கிலோமீற்றர் தூரத்தைக் கடக்கும் போது பயகரமான மிருகங்களைச் சந்திக்க நேர்ந்ததாக பாலச்சந்திரன் நிரோஜன் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment