மீன்பிடிக் கப்பலில் இருந்து 23 கிலோ ஹெரோயின் கண்டுபிடிப்பு
பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 23 கிலோ 235 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் வைத்து குறித்த கப்பலை சோதனையிட்டதில் ஹெரோயின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 42 வயதுடைய மிரிஸ்ஸ, கம்புருகமுவ மற்றும் பிடிகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment