22 கரட்டுக்கு மேல் உள்ள தங்கத்தை நகைகளாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வர்த்தமானி
தங்கக் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விமானப் பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் விதிமுறை முன்பு கொண்டு வரப்பட்டது.
எவ்வாறாயினும், பயணிகள் வருகைக்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் பணிப்பாளரிடம் அனுமதி பெற்றால் நகைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் விமானப் பயணிகள் தங்க நகைகள் அணியக் கூடாது எனத் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளாந்தம் 50 கிலோ தங்கம் நாட்டிற்கு கடத்தப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில நபர்கள் அண்டை நாடுகளுக்குச் சென்றுவிட்டு 24 கரட் தங்க நகைகளுடன் திரும்புவது வழக்கம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தல் காரணமாக அரசுக்கு மாதாந்தம் சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment