Header Ads



20 வருடங்கள் ஜனாதிபதியாக செயற்பட ரணில் வல்லமையுடையவர்


உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் எவ்வாறாயினும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவே அதிபராக இருப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து ஒரு வருடத்திற்குள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதன் பின்னர் பத்து அல்லது இருபது வருடங்கள் அதிபராக செயற்படுவதற்கு ரணில் விக்ரமசிங்க வல்லமையுடையவர் என்றும் அவர் கூறினார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் சிறிகொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1 comment:

  1. கட்சியின் பிரதித் தலைவரின் மிகப் பெரிய போதனையின் இரகசியத்தைப் பாருங்கள். சரியான நேரத்தில் சரியான விடயத்தைக் கூறிய அவர் அடுத்த பாதுகாப்பு அமைச்சராக பதவிவகிக்கப்போகின்றார் என்ற இரகசியத்தை பொதுமக்கள் கதைத்துக் கொள்கின்றனர். இதற்குப் பெயர் நரித்தந்திரம். இங்கு உண்மையும் நீதியும் கொண்ட இம்தியாஸ் பாகிர் மரிக்காருக்கு இடமில்லை. போலியும் கபடமும், இரட்டை வேடமும் கோலோச்சி நிற்கும் அரசாங்கம்.

    ReplyDelete

Powered by Blogger.