உஸ்பெகிஸ்தான் ஆசிய கோப்பை, இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20000 டொலர் அபராதம் 5000 ஆயிரமாக குறைப்பு
இலங்கைக்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் விதிக்கப்பட்ட 20,000 அமெரிக்க டொலர் அபராதம் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமாரின் தலையீட்டினால் 5000 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினராக தான் தொடர்ந்து செயற்படுவதன் காரணமாக இந்த இந்த நிவாரணம் பெற இது பெரும் உதவியாக இருந்ததாக ஜஸ்வர் உமார் தெரிவித்தார்.
ஜஸ்வர் உமார் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் சமர்ப்பித்த முறையீட்டின் பிரகாரம், ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.எஞ்சிய 15,000 டொலர் அபராதத்தை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவும் தீர்மானித்துள்ளது.இரண்டு வருடங்களுக்குள் இலங்கை கால்பந்து சம்மேளனம். கால்பந்து போட்டிகளில் பங்கேற்கத் தவறும் பட்சத்தில் இந்த 15,000 டாலர்கள் செலுத்த வேண்டி வரும் என்று ஜஸ்வர் உமார் கூறுகிறார்.
2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை இளையோர் உதைபந்தாட்ட அணி கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்ட போதிலும், கடைசி நேரத்தில் அந்தப் பயணம் இரத்துச் செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் ஒழுக்காற்றுக் குழு, போட்டி விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கைக்கு 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.அதுமட்டுமின்றி எதிர்வரும் போட்டியில் பங்கேற்க தடை விதிப்பது குறித்தும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
இலங்கை முகங்கொடுத்துள்ள உதைப்பந்தாட்ட நெருக்கடிக்கு இந்த நிதி அபராதம் மற்றொரு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஜஸ்வர் உமார் கூறுகிறார்.
விளையாட்டு அமைச்சுக்கும் இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு பங்கேற்க முடியவில்லை.
விளையாட்டுக் கழகங்களின் பதவிக் காலத்தை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பொருத்தமான மாற்று வழி முன்னெடுக்கப்படாமையினால் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது எனவும் ஜஸ்வர் உமார் தெரிவித்துள்ளார்.
Post a Comment