Header Ads



கொண்டாடும் அளவுக்கு பெரிய சுதந்திரம் இல்லை, 200 மில்லியன் செலவழிப்பது அர்த்தமற்றது


தேசிய சுதந்திர தின கொண்டாடத்திற்கு செலவாகும் 200 மில்லியன் ரூபா பணத்தை அர்த்தமுள்ள ஒன்றுக்கு பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் நாடாளுமன்றத்தில் இன்று -18-  கோரிக்கை விடுத்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேள்வி ஒன்றை முன்வைத்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது 


நாடு தற்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.


குறிப்பாக கிராம மற்றும் நகர புற வறிய மக்களுக்கு அன்றாடம் உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இருக்கின்றது. உணவு சாப்பிடாத காரணத்தினால், பாடசாலை நேரத்தில் சில பிள்ளைகள் மயக்கமுற்று விழுந்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளன.


எடை குறைந்த பிள்ளைகள் அதிகளவில் பிறப்பதாக வைத்தியசாலைகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அரச ஊழியர்கள் உட்பட அனைத்து மக்களும் குறைந்த வருமானத்தில், வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.


வர்த்தக துறை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் அதிகளவில் பணத்தை செலவிட்டு, சுதந்திர தின கொண்டாடத்தை நடத்துவது பொருத்தமற்றது.


இராணுவ அணி வகுப்பை நடத்தி, பாரிய வெடிகளை வெடிக்க செய்து, கொண்டாடும் அளவுக்கு சுதந்திரம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 200 மில்லியன் ரூபா என பிரதமரின் பதிலாக இருக்கலாம்.


எனினும் வெடி மருந்து,பாதுகாப்பு அமைச்சு ஆகும் செலவுகளை எடுத்துக்கொண்டால், 200 மில்லியன் ரூபா அல்ல அதனை விட செலவாகும். நாட்டில் தற்போது கொண்டாடும் அளவுக்கு சுதந்திரமும் இல்லை.


நாட்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அறிவிப்பு அல்லது வேலைத்திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டுமே அன்றி நிதியை செலவிடுவது கேலிக்குரிய வேலை எனவும் அத்துரலியே ரதன தேரர் கூறியுள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன,குறைந்த செலவில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் தேசிய ரீதியில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் எனக் கூறியுள்ளார். Tw

No comments

Powered by Blogger.