Header Ads



நட்சத்திர வீரர்களிடையே மோதல் - ஒரு டிக்கெட் இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய்க்கு விற்பனை


ரியாத் நகரில் வரும் 19ஆம் தேதி மெஸ்ஸி பங்கெடுக்கும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும், சௌதியின் அல்-நாசர் மற்றும் அல்-ஹிலாலை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் அடங்கிய அணியும் மோதும், காட்சிப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் மூலம் மெஸ்ஸி - ரொனால்டோ இருவரும் பரஸ்பரம் மோதிக்கொள்ளும் மற்றோர் ஆடடத்தைக் காணும் வாய்ப்பு கால்பந்து ரசிகர்களுக்குக் கிட்டியுள்ளது.


பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் மெஸ்ஸி தவிர்த்து, நெய்மர், எம்பாப்பே, ஹக்கிமி, மோரிகியூனோஸ் ஆகிய முன்னணி வீரர்களும் இடம் பெற்றிருப்பதால் வளைகுடா கால்பந்து ரசிகர்களால் இந்தப் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் போட்டியை நேரில் காண்பதற்கான கௌரவ டிக்கெட் ஒன்று, ஏலத்தில் இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பை எட்டியுள்ளது. வரும் 17ஆம் தேதி வரை ஏலம் நீடிக்கும் என்பதால், அதன் மதிப்பு மேலும் பல மடங்கு உயர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை.


ரொனால்டோ - மெஸ்ஸி மோதும் ஆட்டத்தைக் காண கால்பந்து உலகம் எவ்வளவு தூரம் தவம் கிடக்கிறது என்பதை உணர்த்துவதற்கு இது ஒன்றே போதும்.

No comments

Powered by Blogger.