Header Ads



மாதாந்தம் 20 கோடி சம்பாதிக்கும் JVP


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக  கட்டுப் பணம் செலுத்தும்    நிகழ்வு இன்று(09)  குருநாகல் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக குருநாகல் பௌத்தலோக விகாரையில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.


இதன் போது கருத்துத் தெரிவித்த  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,


குருநாகலில் நாம்  தேர்தலை மிகவும் வலுவாக எதிர்கொள்வோம். ஏனைய கட்சிகளுடன் பார்க்கும் போது  மொட்டுக்  கட்சியே முன்னணியில் இருப்பதாக நினைக்கின்றேன்.சில கட்சிகள் வேட்புமனு தாக்கலுக்குக்  கூட தயாராக இல்லை. தயாராக இல்லாதவர்கள்  தான் தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர்.   அவர்கள் சொல்வது  பொய் என்பது அனைவருக்கும் புரியும். அவர்கள்  வருடம் முழுவதும் பொய் சொல்கிறார்கள்.  தேர்தலுக்குத்  தயாராக இல்லாத கட்சிகள்  தேர்தலை நடத்துமாறு  கேட்கின்றன. எமது  மொட்டுக்  கட்சி முன்னணியில் உள்ளது என்பதை நாம் தெளிவாக கூறுகின்றோம்.


ரணில் விக்ரமசிங்கவுடன் ஏதாவது பிரச்சினையா என ஊடகங்கள் கேட்கின்றன. ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கியுள்ளோம் என்றால்,  ஜனாதிபதியாக்கியவருடன் இணைந்து பணியாற்றுவதில் என்ன பிரச்சினை? அவர் சிறப்பாக  செயற்படுகிறார். நாங்கள் எங்கள் வெற்றியை அவரிடம் ஒப்படைத்தோம். ரணில் விக்ரமசிங்கவுடன் நாங்கள்  பணியாற்றிவருகிறோம். சஜித்  பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தோம்.  யாரும் ஏற்கவில்லை. பொறுப்பேற்ற ரணிலுடன் பணியாற்றி வருகிறோம்.  அவருடன் பணியாற்றியிருக்கிறேன். கோத்தாபய சென்ற பின்னர் ரணிலை வெற்றிபெற வைத்தோம். அனுபவம் நிறைந்த அரசியல் தலைவரான ரணில் விக்ரமசிங்க  பணியாற்றி காண்பித்திருக்கிறார். அவருடன் பணியாற்றுவதில்  பிரச்சினையாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.


இன்றும்  மத்திய வங்கி  மோசடி தொடர்பில்  குற்றம் சுமத்துகின்றோம்.குற்றவாளிகளை உரிய முறையில் விசாரணை செய்து தண்டிக்க வேண்டும். நாங்கள் அதனை  வாபஸ் பெறவில்லை. எமது தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  எமது கட்சியின் முதிர்ந்த இலட்சியத் தலைவர்  அதனை நாம் ஒருபோதும் நாம் மாற்றியதில்லை.


திஸ்ஸமஹாராமய   தேர்தலில் ஜே.வி.பி வென்றது. அதே மக்கள் அவர்களை தோற்கடித்தார்கள்.   அமைச்சர்களாக பதவி வகித்தனர்.எப்படி குளங்கள் கட்டப்பட்டது என்று பார்த்தோம். ஜே.வி.பி. தேர்தலில் தோற்கும் ஒவ்வொரு முறையும் துப்பாக்கியை கையில் எடுக்கும் அல்லது தேர்தலில் போட்டியிடாது.1971ல்  துப்பாக்கியை கையில் எடுத்தார்கள்.   86 - 87 களில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று சிந்தியுங்கள்.


கூட்டம் சேர்ப்பதற்கு அவர்களிடம் பணம் இருக்கிறது, அவர்களின் வங்கியில் உள்ள பணத்தில் இருந்து இப்போது மாதம் சுமார் இருபது கோடி சம்பாதிக்கிறார்கள். அந்த இருபது கோடியில் இருந்து யாருக்காவது ஒரு தண்ணீர் போத்தலாவது வாங்குக் கொடுத்திருக்கிறார்களா? ஆட்சியை கைப்பற்றினால்  ஆட்சிசெய்யக் கூடிய நபர்கள் இருக்கிறார்களா?   சில வாக்குகளை  வைத்துக் கொண்டு அவதூறு செய்வது   மிக சுலபம். ஜனநாயக கட்டமைப்பின் மூலம் அரசியல் செய்யும் எந்த கட்சிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல.  தேர்தலை நடத்திப் பார்த்தால் முடிவுகளை அறியலாம்.

No comments

Powered by Blogger.