Header Ads



குத்பா பிரசங்கத்தையும், ஜும்ஆ தொழுகையையும் பிற்பகல் 1 மணிக்குள் நிறைவு செய்யுங்கள்


தற்பொழுது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பரீட்சையில் தோற்றியிருக்கின்ற அனைத்து மாணவர்களும் வெற்றிபெற அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.


பொதுவாக பரீட்சைக் கடமையில் ஈடுபடுவோர் பிற்பகல் 01.30 மணிக்கு முன்னரும், பரீட்சை எழுதும் மாணவர்கள் பிற்பகல் 01.40 மணிக்கும் பரீட்சை மண்டபத்திற்கு செல்லவேண்டியுள்ளது. அதே நேரம் சில மாணவர்களது பரீட்சை மண்டபங்கள் பள்ளிவாயலில் இருந்து தூரமாகவும் இருக்கின்றன.


எனவே கதீப்மார்கள் மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு தமது குத்பா பிரசங்கத்தையும் ஜும்ஆ தொழுகையையும் பிற்பகல் 01.00 மணிக்குள் நிறைவு செய்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம்

செயலாளர், கல்விக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.