அரசாங்கத்தின் சகல செலவுக்காகவும் 18 பில்லியன் ரூபா மாத்திரமே எஞ்சியிருக்கிறது
தேர்தலுக்கு அவசியமான நிதியை திரட்டுவது சவாலான விடயம் என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சத்தியக்கடதாசி மூலம் உயர் நீதிமன்றத்திற்கு நேற்று (19) அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற கேர்ணல் W.M.R.விஜேசுந்தர தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பிலேயே அவர் சத்தியக்கடதாசியை தாக்கல் செய்துள்ளார்.
அந்நியச்செலாவணி, உள்ளக நிதியினை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வழிகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரச நிதி முகாமைத்துவம் தற்போது சவாலான விடயமாக மாறியுள்ளதாக திறைசேரி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் அரச பணப்புழக்கத்தின் அடிப்படையில் 163 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் அனைத்து செலவுகளுக்காகவும் 18 பில்லியன் ரூபா மாத்திரமே எஞ்சியிருப்பதாக அவர் தனது சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி செயலாளரின் சத்தியக்கடதாசிக்கமைய, அரசாங்கத்தின் மாதாந்த நிதிப் பற்றாக்குறை 296 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகிறது.
இந்த நிலைமையில், செலவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் போது, சிந்தித்து செயலாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடைசித் துரும்பாக அரசாங்கம் திறைசேரி செயலாளரைப் பிடித்து நீதிமன்றம் அனுப்பிய அரசாங்கம் ஏன், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரும் பாராளுமன்றத்தில் பொறுப்பான பதவி வகிப்பவருமான விஜேதாஸ ராஜபக்ஸ, நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் இந்த நாட்டில் பணக்கார ஏற்றுமதியாளர்கள் 53 பில்லியன் டொலர்களை வௌிநாட்டுக்குக் கடத்தியுள்ளார்கள். அந்த பணத்தைத் திருப்பி நாட்டுக்கு கொண்டுவரும் சகல அதிகாரமும் பலமும் அரசாங்கத்துக்கு இருக்கும் போது ஏன் அரசாங்கம் மௌனம் சாதித்து சட்டத்தை சரியாக அமல்நடாத்தி அந்தப் பணத்தைத் திருப்பி எடுத்தால் IMF இடம் 1.9 பில்லியனுக்கு பிச்சை கேட்டுக் கொண்டு திரிய வேண்டிய அவசியமில்லை. மக்களையும் வாழவைத்து அரசியலையும் நடாத்தலாம். ஆனால் அந்த பணக்காரர்கள் , ஏற்றுமதியாளர்கள் அரசின் அடிவருடிகள். அவர்களுக்கு சட்டத்தை அமல்நடாத்த முடியாது என அரசாங்கம் ஒதுங்கி தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள முயன்றால் அது எல்லோருக்கும் அழிவையும் நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் இழிவையும் தான் கொண்டுவரும்.
ReplyDelete