18 வயது பிக்கு உயிரிழப்பு
மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு ஒருவர், உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பேராதனையில் இடம்பெற்றுள்ளது.
பேராதனை, ஏந்தடுவாவ புராதன விகாரை வளாகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை விகாரையின் மேல் முற்றத்தில் குறித்த பிக்கு வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை, மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதில் மண்ணுக்குள் புதையுண்டு படுகாயமடைந்த பிக்கு பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (20.01.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
Post a Comment