17 வயதுடைய பெண் பிள்ளைக்கு அவரது, தாயாரின் சிறுநீரகம் மாற்றப்பட்டு அறுவைச் சிகிச்சை
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு அவரது தாயாரின் சிறுநீரகம் மாற்றப்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், இது ஒரு வரலாற்றுச் சாதனை என யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் -30- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
17 வயது பெண் பிள்ளை ஒன்று சிறுநீரகத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிள்ளையின் தயார் தனது சிறுநீரகத்தை அவருக்கு தனமாக வழங்க சம்மதித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் சத்திர சிகிச்சை கூடத்தில் நான்கு மணித்தியாலங்கள் குறித்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், வெற்றிகரமாக தயாரது சிறுநீரகம் பிள்ளைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்திய சாலையின் வரலாற்றில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ள முதலாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுநீரகம் செயலிழந்தவர்கள் யாருக்காவது தங்களுடைய சிறுநீரகத்தினை தானமாக வழங்க யாராவது முன் வந்தால் அதற்குரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாற்று அறுவைச் சிகிச்சையை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியும் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ibc
Post a Comment