கணவனை போன்று 16 வருடங்களின் பின், விமான விபத்தில் பலியான மனைவி
நேபாள விமான விபத்தில் கொல்லப்பட்ட, துணை விமானியான அன்ஜு கட்டிவாடாவின் கணவரும் 16 ஆண்டுகளுக்கு முன்னர் விமான விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் பொகாரா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற விமான விபத்தில் விமானத்தில் இருந்த 72 பேரும் கொல்லப்பட்டனர். இதில் பலியான அன்ஜுவின் கணவர் தீபக் பொக்ரலும் விபத்துக்கு உள்ளான யெட்டி விமான சேவையில் பணியாற்றிய நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த விமான விபத்தில் பொக்ரலுடன் விமானத்தில் இருந்த ஒன்பது பேரும் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து கணவரின் காப்புறுதி பணத்தைக் கொண்டே அன்ஜு விமானமோட்டப் பயிற்சி பெற்று துணை விமானியாகியுள்ளார்.
Post a Comment