Header Ads



149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கை - 55 பேர் கைது


மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது 9 கிராம் 980 மில்லி கிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கி இந்த போதைப்பொருள் சோதனைகள் தொடரும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.