Header Ads



14 நாட்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, 5 பில்லியன் ரூபா செலவாகுமாம்..!


இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவத்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பட்டார்.


மேலும், பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளொன்றிற்கு 357 மில்லியன் ரூபா வீதம் தொடர்ச்சியாக 14 நாட்கள் மின்சாரம் வழங்குவதற்கு 5 பில்லியன் ரூபா செலவாகும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். (அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.