100 க்கும் மேற்பட்ட, வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக , பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன .
அதன்படி , 15 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பதுளை ஹல்தமுல்ல மற்றும் மஹியங்கனை பிரதேச சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஹாலிஎல பிரதேச சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன .
உலங்குவானூர்தி சின்னத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களும் அனுராதபுரம் , கல்னேவ மற்றும் திருகோணமலை , கந்தளாய் ஆகிய இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன .
திருகோணமலை - சேருவில பிரதேச சபையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த சமர்ப்பணங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன .
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் கந்தளாய் பிரதேச சபையாலும் , முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பு மனுக்கள் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் கலவான பிரதேச சபைகளாலும் நிராகரிக்கப்பட்டுள்ளன .
அத்துடன் , 10 அரசியல் கட்சிகள் மற்றும் மூன்று சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் உள்ளூராட்சி நிறுவனங்களால் களுத்துறை மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் காலியில் 06 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன .
Post a Comment