பாரிய நிதி நெருக்கடியில் திறைசேரி - இம்மாதம் 1 முதல் நடைமுறைக்கு வரும் மின் கட்டண உயர்வு
இலங்கையில் மின்சார கட்டண உயர்வு 2023 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கான ஒப்புதலை நேற்று கூடிய அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில், திறைசேரி கடுமையான நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. 2022 பொருளாதார நெருக்கடி காரணமாக திறைசேரிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததை விட திறைசேரி பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளார். tw
Post a Comment