Header Ads



STF எனக்கூறி, காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்தவனுக்கு நேர்ந்த கதி


பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் எனக் கூறி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், காரை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது காருக்குள் இருந்த நபருடன் இணைந்து காரின் உரிமையாளரிடம் 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், கார் உரிமையாளரும் மற்றுமொரு நபரும் இணைந்து தப்பியோடிய நபரை பொன்சேகா வீதியில் வைத்து பிடித்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.


சந்தேகநபர் இன்று -08- புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.