முஸ்லிம் Mp க்களின் கடிதம், குப்பையில் வீசப்பட்டதா..?
இவ்விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; நூறு வருடங்களுக்கும் மேலாக இயங்கிவந்த இப்பள்ளிவாசல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு பாதுகாப்பினை காரணம் காட்டி சிறைச்சாலை நிர்வாகத்தினால் கையேற்கப்பட்டு வேறு விடயங்களுக்காக பள்ளிவாசல் பயன்படுத்தப்படுகிறது. பள்ளிவாசல் 1967ல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஹதியா பாடசாலையும் இங்கு நடாத்தப்பட்டது எனும் விபரங்களுடன் ஜனாதிபதிக்கு கடிதம் வழங்கியுள்ளோம்.
இக்கடிதங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் ஆளுநர் அசாத்சாலி ஊடாக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் ஜனாதிபதியிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
பள்ளிவாசல் நிர்வாகமும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப்ஹக்கீம், மற்றும் முஜிபுர் ரஹ்மான் என்போரை நேரில் சந்தித்தும் இக்கோரிக்கையை முன்வைத்தது. மற்றும் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டையும் நேரில் சந்தித்து கலந்துரையாடியது. ஆனால் சந்திப்புகள் தொடர்பில் இதுவரை ஏதும் முன்னேற்றங்கள் இடம்பெறவில்லை.
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் மஹர பள்ளிவாசல் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார்.
அதனையடுத்து அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் பொருத்தமான காணியொன்றினை இனங்காணுமாறும் அவ்விடத்தில் பள்ளிவாசலொன்றினை நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளார் என்றார்.
இவ்வாறான நிலையில் இவ்விவகாரம் தொடர்ந்தும் தாமதமாகிவருவதால் மஹர பகுதி மக்களின் சமயக்கடமைகளுக்கு தொடர்ந்தும் சவால்கள் எழுந்துள்ளன. எனவே விரைவில் மஹர பகுதி மக்களுக்கு பள்ளிவாசலொன்றினை நிர்மாணித்து தர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோரியுள்ளோம் என்றார்.- Vidivelli
Post a Comment