Header Ads



திருகோணமலைக்கு வடகிழக்காக நிலைகொண்டுள்ள “Mandous” என்ற பாரிய சூறாவளி


தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு வடகிழக்காக 240 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற பாரிய சூறாவளியானது நேற்று இரவு 11.30 மணிக்கு வட அகலாங்கு 10.60 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 82.30 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.


அதுமேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் டிசம்பர் 09 ஆம் திகதி நள்ளிரவுப் பொழுதில் வடதமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் தொடர்ந்தும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


(வளிமண்டலவியல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.