இஸ்லாத்தை விட்டுக்கொடுக்காத கத்தார் மன்னரின் போக்கால், அவர் உலக முஸ்லிம்களின் உள்ளங்களை வென்றாரா..?
- லத்தீப் பாரூக் -
எரிபொருள் வளம் மிக்க கத்தார் நாட்டின் ஆட்சியாளர் தாமிம் பின் ஹமாத் அல் தானி இன்றைய நிலையில் உலக முஸ்லிம்களின் உள்ளங்களை வென்ற ஒரு தலைவராகக் காணப்படுகின்றார். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அவரை பெரும் கௌரவத்தோடு பார்க்கின்றனர். கத்தாரின் தலைநகர் தோஹாவில் தற்போது நடத்தப்பட்டு வரும் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டித் தொடரின் போது இஸ்லாத்தை விட்டுக் கொடுக்காத வகையில் அவர் எடுத்துள்ள முடிவுகளும் நடவடிக்கைகளுமே இதற்கு காரணம்.
உலகக் கிண்ண காலபந்தாட்டம் என்பது உலகிலேயே மிகவும் கீர்த்திமிக்க ஒரு விளையாட்டுப் போட்டியாகும். அதிகப்படியான இரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் போட்டித் தொடரும் இதுவேயாகும். இந்தப் போட்டியை இவ்வாண்டு 2022ல் நடத்தும் வாய்ப்பைப் பெற்ற உலகின் முதலாவது முஸ்லிம் நாடாக கத்தார் திகழ்கின்றது. சுமார் 220 பில்லியன் டொலர் செலவில் இந்தப் பேட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறேனும் இவ்வாண்டு இப்போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை கத்தார் பெற்றுக் கொண்டது முதல் மேற்குலகும் அதன் வளைகுடா நேச நாடுகளும் இன்னும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் உதைபந்தாட்ட அணிகளும் கத்தார் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வண்ணமே இருந்தன.
முஹ்தஸம் ஏ தலோல் என்ற பத்தி எழுத்தாளரின் கருத்துப்படி கத்தார் மனித உரிமைகள், ஊழல், இனவாதம் என எந்த குற்றச்சாட்டுக்களும் அற்ற ஒரு நாடு. ஜெர்மன் உள்துறை அமைச்சர் நன்ஸி பீஸர் தெரிவித்துள்ள கருத்தில் இது வெளிப்படையாக தெரிகின்றது ‘கருத்தில் கொள்ள வேண்டிய அளவுகோல்களின் வகைப்படுத்தல்கள் பல உள்ளன. இது போன்ற (கத்தார்) நாடுகளுக்கு இந்தப் போட்டித் தொடரை வழங்காமல் இருப்பதே நல்லது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிடப்படும் பிரச்சினைகள் உண்மையில் மனித உரிமைகளோடு அல்லது சிவில் சுதந்திரத்தோடு தொடர்புடையதாக இருப்பின் ஜெர்மன் அமைச்சரும் கத்தாருக்கு போட்டித தொடர் வழங்கப்பட்டதை விமர்சிக்கும் அவரது சகபாடிகளும் இஸ்ரேல் மீது தமது பார்வையை செலுத்தியிருக்க வேண்டும்.
கால்பந்தாட்ட போட்டிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாரம்பரிய கூடாரம் காரணம் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் தான் பலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை தொடர்ந்தும் மீறி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு நாடு பல யுத்தக் குற்றங்களையும் புரிந்துள்ளது.
உண்மையில் ஜெர்மன் அமைச்சர் இதைத்தான் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். தனது நாடு சர்வதேச சட்டங்களை தொடர்ந்து அவமதித்து வரும் இஸ்ரேலுடன் ஏன் விஷேடமான உறவுகளைப் பேணி வருகின்றது என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
எவ்வாறாயினும் பல அரபு மக்களும் முஸ்லிம்களும் கத்தாருக்கு தமது பூரண ஆதரவை வழங ;கி உள்ளனர்.
கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ந்து உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தொடங்க சில மாதங்களுக்கு முன் வரை, கடைசி தருணத்தில்; மிகவும் தீவிரம் அடைந்த விடயம் என்னவென்றால் மேலைத்தேசங்களின் பாரபட்ச போhக்கின் ஆழம் மிகத் தெளிவாக வெளிப்பட்டதுதான். அவர்களின் தார்மிகப் போக்கின் வெளிப்பாடு மிகவும் குறிப்பாக அவர்களின் ஒட்டு மொத்த இரட்டை வேடம் என்பன உலகுக்கு புலப்பட்டன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பற்றியும் அவர்கள் விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான் உலகின் மிகவும் கொடிய கொடுங்கோல் ஆட்சியாளர்களைப் பாதுகாத்தும் ஊக்குவித்தும் வருகின்றன. இவர்களின் பாதுகாப்பு பெற்றுள்ள ஆட்சியாளர்கள் தான் மத்திய கிழக்கில் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் மனித உரிமைகளை பறித்துள்ளனர். ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் மனித உரிமைகள் பற்றி இவர்கள் பேசலாம்.
மனித உரிமைக் காவலர்கள் என தம்மை அழைத்துக் கொள்ளும்; இவர்கள்தான் பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்த எரிபொருள்; வளம் மிக்க ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகள் மீதும் சிரியா, யெமன், ஆப்கானிஸ்தான் போன்ற ஏழை நாடுகள் மீதும் குண்டுகளை மழையாகப் பொழிந்து அந்த நாடுகளை சின்னாபின்னப் படுத்தியவர்கள். இந்தப் பிராந்தியத்தில் தங்களால் பாதுகாத்து போஷிக்கப்படும் இஸ்ரேலின் மேலாதிக்கத்தை தொடர்ந்து பேணும் நோக்கில் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள தமது கைக்கூலி ஆட்சியாளர்களையும் இந்த அநியாயத்தின் பங்காளிகளாக அவர்கள் பயன்படுத்தினர். இதில் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பல மில்லியன் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். இந்த நாடுகள் யாவும் கொலைகளங்களாக மாற்றப்பட்டன.
உலகளாவிய உiதாந்தாட்ட போட்டிகளின் பாரம்பரிய நுழைவாயிலாக ஐரோப்பிய நாடுகளையே அவர்கள் பார்க்கின்றனர். அதுதான் பிரதான பிரச்சினை. இவ்வாறான ஒரு கீர்த்திமிக்க நிகழ்வை ஒரு அரபுலக மத்திய கிழக்கு நாட்டால் ஏற்பாடு செய்ய முடியும் என்ற எண்ணத்தைக் கூட அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
பெரா அபு ஹலால் என்ற பத்தி எழுத்தாளர் தெரிவித்துள்ள கருத்தில் இந்தப் போட்டித் தொடருக்கான ஊடகப் பிரசாரம் கீழைத்தேச மற்றும் ஐரோப்பியமத்திய போக்கினால் சூழப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு பிபிஸி நிறுவனம் வெளிப்படையாகவே தொடக்க விழாவை நசுக்கியது. பிரிட்டிஷ் ஒளி ஒலிபரப்பாளர்கள் கௌரவ குறைவாக நடந்து கொண்டனர் என ரசிகர்கள் குறை கூறி உள்ளனர். சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கியான்னி இன்பான்டினோ இதற்கு பதில் அளித்துள்ளார். ஏனைய நாடுகளுக்கு தார்மிக பாடங்களை எடுக்கும் நிலையில் மேற்குலக நாடுகள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ‘நான் ஒரு ஐரோப்பியன். உலகம் முழுவதும் கடந்த 3000 வருடங்களாக ஐரோப்பியாகளாகிய நாம் என்ன செய்து கொணடிருக்கின்றோம். மற்ற மக்களுக்கு நாம் தார்மிகப் பாடங்களை எடுப்பதற்கு முன்பதாக அடுத்த 3000 ஆண்டுகளுக்கு உலக மக்களிடம் நாம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
கத்தாரின் கால்பந்தாட்ட அணி வீரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் கேலிச் சித்திரம் ஒன்றை பிரான்ஸ் பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்தது. இவ்வாறு இந்த காழ்ப்புணாவு பட்டியல் நீண்டு செல்கின்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்து இவ்வாண்டின் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரம்மாண்டமான முறையில் கத்தாரின் தலைநகரில் தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற நடிகர் மோர்கன் ப்ரீமென் டீவுளு மு பொப் இசை நட்சத்திரம் ஜுங்கூக் ஆகியோர் ஆரம்ப நாள் விழாவில் பங்கேற்ற போது கத்தாரில் புகழ்பெற்ற ஒரு மாற்றுத் திறனாளியும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான ஞானிம் அல் முப்தாவினால் புனித அல்குர்ஆன் வசனங்கள் ஓதப்பட்டு நிகழ்வுகள் தொடங்கப்பட்டன.
பிரபலமான அந்த நடிகருடனான உரையாடலின் போது கத்தாரின் பிரபல யுடியுப் செயற்பாட்டாளரும் மாற்றுத் திறனாளியுமான, பிறவிலேயே அரியதோர் குறைபாட்டுடன், அரை உடலுடன் பிறந்த ஞானிம் அல் முப்தா நடிகர் ப்ரீமென் எழுப்பிய கேள்விக்கு அழகான குர்ஆன் வசனத்தைக் கொண்டு பதில் அளித்தார். வித்தியாசமான தேசங்களையும், பல்வேறுபட்ட குலம் மற்றும் கோத்திரங்களை சேர்ந்த மக்கள் பூமியில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வசதியாக ஒன்றாக படைக்கப்பட்டுள்ளனர். “இதுதான் வேற்றுமையில் நாம் காணும் அழகு” என்ற குர்ஆன் வசனத்தை ஓதி அவர் பதில் அளித்தார். இதுவே முஸ்லிம்களின் நம்பிக்கையாகும் என்றும் அவர் விளக்கினார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரின் பாதுகாப்பு பிரிவுக்கான தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அப்துல்லாஹ் அல் அன்ஸாரி “இந்த சுற்றுப் போட்டி கத்தாரை அதன் சமயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. கத்தார் எல்லோரையும் வரவேற்கின்றது. ஆனால் நாங்கள் பாரம்பரிய மிக்க ஒரு தேசம். எந்தவொரு பொது வெளி செயற்பாடும் மோசமானதாக இருந்தால் அது வெறுக்கப்படும். எமது கலாசாரத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள் எள்பதே எமது அன்பான வேண்டுகோளாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய போதனைகளுக்கு இசைவாக மதுபானம், ஓரினச் சேர்க்கை என்பன போன்ற தீய செயல்களுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கத்தார் அமீர் ஷேக் தாமீம் உலகப் பகழ்பெற்ற இஸ்லாமிய போதகர் சாகிர் நாயக்கை விஷேட விருந்தினராக அழைத்துள்ளதோடு அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரின் போது இஸ்லாம் தொடர்பான விரிவுரைகளை நிகழ்த்த சாகிர் நாயக் அழைக்கப்பட்டுள்ளார். வித்தியாசமான மத நம்பிக்கைகள் கொண்ட மக்களை முற்றிலும் வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ஒரு சூழலில் ஒன்று கூடி கலந்துரையாட இது வழியமைத்துள்ளது.
இதனிடையே இந்தயாவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) பேச்சாளர் சவியோ றொட்றிகஸ் இந்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோளில்; இந்த நிகழ்வைப் பார்வையிட இந்திய உதைபந்தாட்ட கழகங்கள் மற்றும் வீரர்கள் கத்தார் செல்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
கத்தார் அமீர் சாகிர் நாயக்கை வரவேற்று பேசிய போது, கத்தார் ஆட்சியாளர் தமீம் பின் ஹமாத் அல் தானி தொடக்க விழாவில் கலந்து கொண்டு அங்கு காணப்பட்ட பன்முகத்தன்மைக்கு மரியாதை செலுத்திய போது அரங்கமே அதிரும் வண்ணம் ரசிகர்களிடமிருந்து அவருக்கு பதில் அளிக்கப்பட்டது. “எமது மக்கள் தமக்கிடையிலான வேற்றுமைகளை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு பன்முகத் தன்மையைக் கொண்டாடும் போது எவ்வளவு அழகாக இருக்கின்றார்கள். நல்லதையும் நம்பிக்கையையும் விதைக்கும் தினங்களாக இந்த சுற்றுப் போட்டியின் எதிர்வரும் தினங்கள் அமையட்டும். உங்கள் எல்லோரையும் தோஹாவுக்கு அன்புடன் வரவேற்;கின்றேன்” என்று கூறினார்.
இஸ்லாத்தின் போதனைகள் இந்தச் சுற்றுப் போட்டியின் போது கொடி கட்டிப் பறக்கின்றன. குர்ஆனிய வசனங்கள் மற்றும் ஹதீஸ் எனப்படும் இறை தூதரின் கருத்துக்கள் தோஹா முழுவதும் ஆங்காங்கே காட்சி படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளால் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள சமயச் சார்பற்ற ஆட்சியாளர்களிடம் இருந்து இஸ்லாத்துக்கு இன்றைய யுகத்தில் இவ்வாறான ஆதரவும் வரவேற்பும் ஊக்குவிப்பும் கிடைப்பது மிகவும் அரிதானதாகும். அவர்கள் தமது சொந்த மக்களை நசுக்கி அவர்களின் செல்வங்களை சூறையாடிக் கொண்டு இருக்கின்றனர். இதனால் தான் மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் அன்றி இந்தோனேஷியா, மலேஷியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் கத்தார் மன்னரை பெரும் மரியாதையுடன் பார்க்கின்றனர்.
Post a Comment