Header Ads



முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: ஆலோ­ச­னைக்­கு­ழு சிபா­ரி­சு­க­ளுக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


நாட்டில் காதி­நீ­தி­மன்ற முறைமை இல்­லாமற் செய்­யப்­ப­டக்­கூ­டாது, பதி­லாக காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்பு பலப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும், காதி­நீ­தி­மன்­றங்கள் தர­மு­யர்த்­தப்­ப­ட­வேண்டும், தகு­தி­யா­னவர்கள் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் எனும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட ஆலோ­ச­னைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­க­ளுக்கு கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஏக­ம­ன­தாக அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்­சர் அலி­சப்ரி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.


நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் சட்­டத்­த­ரணி சப்­ரி­ஹ­லிம்தீன் தலை­மை­யி­லான ஆணைக்­குழு சமர்ப்­பித்த சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்கை தொடர்பில் அமைச்சர் முஸ்லிம் பாரா­ளு-­மன்ற அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் கடந்த வியா­ழக்­கி­ழமை 8 ஆம் திகதி கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். அக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போதும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சப்ரி ஹலிம்தீன் தலை­மை­யி­லான ஆலோ­ச­னைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­க­ளுக்கு ஏக­ம­ன­தாக ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தார்கள். ஆலோ­ச­னைக்­கு­ழுவின் அறிக்­கை­யிலும் காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பு இல்­லாமற் செய்­யப்­ப­டக்­கூ­டாது பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்றே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.


வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி தொடர்ந்தும் விடி­வெள்­ளிக்கு இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கையில் ‘பல­தார மணம் நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. பெண்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தற்கும் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.


அத்­தோடு மணப்­பெண்ணின் கையொப்பம் திரு­ம­ணப்­ப­திவில் கட்­டா­ய­மாகப் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். மேலும் ‘வொலி’யின் பிர­சன்னம் திரு­ம­ணப்­ப­தி­வின்­போது மணப்­பெண்ணின் விருப்­பத்தின் பேரில் அமை­யலாம் என்­பதும் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.


முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தினை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும் தீர்­மானம் எட்டப்பட்டுள்ளது.


காதிநீதிபதிகளின் தகைமை அதிகரிக்கப்படவேண்டும் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். உரிய ஊதியம் வழங்கப்படவேண்டும் என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


இத்திருத்த சிபாரிசுகள் வரைபுக்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுமதிக்கப்படும் எனவும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.- Vidivelli

No comments

Powered by Blogger.