உலகின் மிகச்சிறந்த கெப்டன் இவர்தான் - ஏன், எதற்காக..??
- Imam R. Hassan Faizy -
முன்னாள் கிரிக்கெட்டர் சடகோபன் ரமேஷ் உடைய ஒரு நேர்காணலில் இந்தியாவில் இது வரை உங்களுக்குப் பிடித்த கேப்டன் யார் என்று நெறியாளர் கேட்பார்.
ஆம் ஒருவர் இருக்கிறார்..! அவர் மீது என்னதான் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருந்தாலும், இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை, அவர் போன்ற சிறந்த ஒரு கேப்டனை நான் பார்த்ததில் yes, that is அசாருதின் my favourite captain.
நெறியாளர் ஏன் அப்படி..!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மேட்சில் சலீம் மாலிக் அடித்த பந்தை நான் catch விட்டு விட்டேன். மொத்த ஸ்டேடியமே என்னைத் திட்ராங்க மற்ற பிளேயர்ஸ்லாம் என்னை மொரக்கிறானுங்க but my captain looking me said be cool. அடுத்த இரண்டாவது ஓவரில் அதே சலீம் மாலிக் அடித்த பந்தை அசார் கேட்ச் செய்து ஸ்டைலா தூக்கி மேல வீசிட்டு என்னைத் தோள்ல தட்டிக் கொடுத்தார்.
மேட்ச் முடிஞ்சி நானே போய் கேட்டேன் அசார் பாய் அந்தக் கேட்ச்ச விட்டதுக்கு நீங்கள் மட்டும் ஒன்னுமே சொல்லலியே..!
நீ புதுப் பிளேயர் பொதுவா பாகிஸ்தான் மேட்ச்ன்னா எல்லோருக்கும் டென்சன் ஏந்திடுவானுங்க இதுவே நீ பங்களாதேஸ் டீமோட விளையாடி கேட்ச்ச விட்டு இருந்தா திட்டி இருப்பேன் so I know that.. அது மட்டுமல்ல பேட்டிங்கில நான் 32 ரன்ஸ் எடுத்ததுக்கு ஒரு புது செட் சூவும் கொடுத்து என்னை வாழ்த்தினார் இது போல youngstersசை உருவாக்கியவர்.
Post a Comment