பௌத்த பல்கலைக்கழகம் தொடர்பில், ரணிலுக்குச் சென்ற இரகசிய அறிக்கை
பகிடிவதையை கட்டுப்படுத்த பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசு எடுத்துள்ள தீர்மானங்கள் இந்த பல்கலைக்கழகத்திற்குள் நடைமுறைப்படுத்தாது, அங்கு பகிடிவதைகள் அதிகரிக்க காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழங்களில் பகிடிவதை செய்யும் மாணவர்களில் அந்த பல்லைக்கழங்களை சேர்ந்த அனைத்து பல்கலைக்கழங்க மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் இருப்பதாக தெரியவருகிறது.
பகிடிவதை காரணமாக புதிய மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இதனால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கழிவுகளுடன் கூடிய தண்ணீர் நிற்க வைத்து பகிடிவதை
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய அறிக்கை | Secret Report To The President
கழிவுகளுடன் கூடிய தண்ணீரில் நிற்க வைப்பது, பலவந்தமாக மது அருந்த வைப்பது, கடுமையாக உடற்பயிற்சிகளை செய்ய வைப்பது, சில நாட்களுக்கு உணவை வழங்காதிருப்பது, மர்ம உறுப்புக்களை காட்டுமாறு கூறி பலவந்தப்படுத்துவது போன்ற பகிடிவதைகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பகிடிவதைக்கு எதிராக மாணவர்கள் பல்லைக்கழகத்தின் பதிவாளர், மாணவர் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி மற்றும் உபவேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எனினும் பதில் உபவேந்த நெலுவே சுமணவங்ச தேரர் இந்த விடயத்தில் தலையிடுவதில்லை என்பதால், தமக்கு எதனையும் செய்ய முடியாது என பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களிடம் கூறியுள்ளது.
மேலும் நிலைமையை கட்டுப்படுத்த பல்கலைக்கழகத்திற்குள் பொலிஸார் வருவதை பகிடிவதையும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் எதிர்ப்பதாகவும் பகிடிவதைக்கு எதிரான மாணவர்களின் அறை கதவுகளை தாக்குதாகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாகவும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. tamilw
Post a Comment