ஸ்பெயின் பயிற்றுவிப்பாளர் தூக்கப்பட்டார்
ஸ்பெயின் தேசிய அணிப் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக்கேயைப் (Luis Enrique) பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி knockout எனும் 'தோற்றால் வெளியேறும்' சுற்றில் ஸ்பெயின் பெனல்ட்டி கோல்களில் 0-3 என்ற எண்ணிக்கையில் மொரோக்கோவிடம் படுதோல்வியுற்றது.
இந்நிலையில் காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்து ஸ்பெயின் வெறுங்கையுடன் நாடு திரும்பியது.
அதிலிருந்து 24 மணி நேரத்துக்குள் அணிப் பயிற்றுவிப்பாளர் என்ரிக்கே அதிரடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
புதிய பயிற்றுவிப்பாளராக 61 வயது டெ லா ஃபுவன்தே (De la Fuente) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃபுவன்தே ஸ்பெயினின் 21 வயதுக்குட்பட்ட வீரர்களின் அணிக்கு முன்பு பயிற்றுவிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment