நான் முதலமைச்சராகியது சுசில் பிரேமஜயந்தவினால் மட்டுமே, ஹக்கீமினாலோ, முஸ்லிம் காங்கிரஸினாலோ அல்ல
(அஷ்ரப் ஏ சமத்)
வட கிழக்கினை இணைக்க வேண்டுமென்றால் வட கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பதனை முஸ்லிம் தலைவா்கள் வெளிப்படையாகவும் முஸ்லிம்களிம் எடுத்துக் கூறுதல் வேண்டும் என சுற்றாடல் அமைச்சா் நசீர் அஹமட் கேள்வி எழுப்புகின்றாா்.
நேற்று ஞயிற்றுக் கிழமை 18ஆம் திகதி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஆசிரியா் மருதுாா் ஏ ஹசன் எழுதிய முன்பள்ளி ஆசிரியா்கள் வழிகாட்டி எனும் நுால் வெளியீட்டின்போதே சுற்றாடல்துறை அமைச்சா் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அங்கு உரையாற்றும்பேதே மேற்கண்டவாறு முஸ்லிம் தலைவா்களிடம் கேள்வி எழுப்புவதாகக் தெரிவித்தா்.
இந் நுாலின் முதற் பிரதியை தொழிலதிபா் முஸ்லிம் சலாஹூதீன் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.இந் நுாலின் விமா்சன உரையை பேராதனை பல்கலைக்ககழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளா் முப்சால் அபுபக்கர் நிகழ்த்தினாா்.
தொடா்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சா் நசீர் அஹமட்
13வது சர்த்தினைக் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் முஸ்லிம் தலைவா் ரவுப் ஹக்கீம் அங்கு தெரிவித்தாா். அவ்வாறானேயானால் முஸ்லிம்களது காணி தொடா்பான விடயங்களையும் அவா்கள் முஸ்லிம்களிம் வந்து கூறவேண்டும்
வடகிழக்கு மக்களது சகல காணிகளும் மீளக் கையளிக்கப்படல் வேண்டும். அதுக்குப் பிறகே 13ஜ அமுல்படுத்துங்கள் அதுதான் நியாயமாகும்.. அதுக்கு அப்பால் வடகிழக்கினை இணைப்பதென்றால் வட கிழக்கில் வாழும் சகல முஸ்லிம்களது அரசியல் அதிகாரம் என்ன ? இதனைச் சொல்ல வக்கில்லாத அரசியல் தலைமைகள் முஸ்லிம்களது அரசியல் தலைவா்களாக அங்கு இருக்க முடியாது.. இந்த ஏமாற்று அரசியலுக்கு முஸ்லிம்கள் சோரம் போக முடியாது. தமிழ் முஸ்லிம் உறவுகள் கட்டாயம் தேவையாகும். வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைக்கும் . தீர்வுக்கு நாம் எதிரானவா்கள் அல்ல . கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்ததில் எந்தளவு தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டதோ அதே சமமான அளவு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ் விடயத்தினை சரியான முறையில் புரிந்து கொண்டு நிரந்தர சமாதானம் மலர வேண்டும் என எல்லோறும் நினைத்தால் அதில் நிரந்தரமாக சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரமும் வட கிழக்கில் முஸ்லிம்களது காணிப்பிரச்சினைகள் விகிதாரசாமும் சமமாகப் பேனப்படல் வேண்டும்.
எனது மடடக்களப்பு மாவாட்டத்தில் கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் 45க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் அழிக்கப்பட்டன. அந்தக் கிராமங்கள் இன்று இருந்திருந்தால் அப்பிரதேசங்கள் சிறந்த நகரங்களாகியிருக்கும். அம்மக்களை சிதரடிக்கவிட்டு அக்காணிகளை பலவந்தமாக பிடித்து வைத்துள்ளனா். இதனைப் பெற்றுக் கொடுக்க நான் பாடுபடுவேன். . 13வது திருத்தம் காணி பொலிஸ் அதிகாரம் இல்லாமலே கடந்த காலத்தில் மாகாண சபைகள் ஆட்சிகள் நடந்து வந்த வரலாறு உள்ளது. .இவ் அதிகாரத்தில் மாகாண முதலமைச்சருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நானும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக இருந்து வந்துள்ளேன். அதன் அனுபவத்தில் சொல்கின்றேன்.
நான் கிழக்கு மாகணசபைக்கு முதலமைச்சராக எப்படி வந்தேன் ? என்பதை இன்று இவ் மேடையில் வைத்து முதன் முதலாகச் சொல்லுகின்றேன்.
நான் கிழக்கு மாகண முதலமைச்சராக வந்தது ரவுப் ஹக்கிமோ அல்லது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அல்ல.அது குறிப்பாக இன்று கல்வியமைச்சராக இருக்கின்ற சுசில் பிரேமஜயந்தவினால் மட்டுமே. அன்று சுசில் பிரேம் ஜயந்த அவா்கள் ஜக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்தாா்கள்.அவா் அவருடைய அலுவலகத்திற்கு அவருடைய கட்சியில் 14 மாகாணசபை உறுப்பிணா்கள் இருந்தாா்கள். அவா்களை கொழும்புக்கு அழைத்திருந்தாா்.அதில் 13 பேர் வந்திருந்தாாகள்.அன்று 13பேரும் முதலமைச்சராக நசீர் அஹமதின் பெயரைச் சொல்லி சத்தியக் கடதாசியில் ஒப்பமிட்டாா்கள்.அதன் ஊடகத்தான் நான் கிழக்கு முதலமைச்சர் பதவியைப் பெற்றேன்.
இம்முடிவினால் முஸ்லிம் காங்கிரசுக்கு வேறு ஒன்றும் செய்ய முடியாமல் போகிவிடடது.அதில் உதுமாலெப்பை கூட எனக்கு ஆதரவாக இருந்தாா். ஆனால் ஜெமில் ்,சுபைர் என்னோடு உடன்படவில்லை. இதுதான் கிழக்கு முதலமைச்ர் பெற்ற வரலாறாகும்.
அதற்குப் பிற்பாடு நடைபெற்ற வரலாறும் ஒனறு உண்டு. நான் முதலமைச்சராக வந்ததனால் உதுமாலெப்பை. விமல்வீர மாகாண அமைச்சா், நான் பதவிவகித்த அமைச்சர் பதவியை நஜீப் ஏ மஜீதுக்கு வழங்க வேண்டும்.பெப்ர 6ஆம் திகதி ஆட்சியமைத்தோம். ஆனால் அட்டாளைச்சேனை உதுமாலெப்பை அமைச்சராக இருக்கக் கூடாது என ரவுப் ஹக்கீம் சொன்னதாலேயே ஆட்சி குழம்பியது.இதனால் ஒரு மாதம் 5 அமைச்சுக்களையும் நான் முதலமைச்சா் பதவி வகித்த வரலாறும் உண்டு. அதன்பிறகு நானாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவாத்தை நடாத்தினேன்.ஆட்சியை நடத்திக் கொண்டு போகக் கூடிய வரலாறு நடைபெற்றது.
ஆகவேதான் 13வது திருத்தம் அமுல்படுத்துவதற்கு முதல் முஸ்லிம் களுக்குரிய சகல காணிகளையும் மீள முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். வடக்கிழக்கில் இரானுவம் கூட இனச் சுத்திகரிப்புச் செயய்வில்லை ஆனால் விடுதலைப்புலிகள் இனச் சுத்திகரிப்புச் செய்தனா். வடக்கில் பலவந்தமாக முஸ்லிம்களை விரட்டியடித்து இன்றும் அந்த மக்களது சொத்துக்கள் காணிகள் மீள் ஒப்படைக்கப்படவில்லை. அவா்கள் இன்றும் கஸ்டப்பட்டு இடம் பெயா்ந்து சிதருண்டு வாழ்கின்றனா்.
இதனால் நான் தான் நாங்கள் எவ்வாறு உங்களை நம்பி வடகிழக்கில் 13வது சா்த்து அமுலாகி நாங்கள் வாழ முடியுமா ? எங்கள் மீது கை வைத்தனாலேயே உங்களது போரட்டம் கைசேதப்பட்டது. என அங்கு நசீர் அஹமட் தெரிவித்தாா்.
Post a Comment