Header Ads



எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும் என்று, ஜனாதிபதியிடம் எவரும் முரண்படத் தேவையில்லை - நாமல்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசில் எந்த அமைச்சுப் பதவியையும் நான் பொறுப்பேற்கமாட்டேன் என முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை. ரணில் பழுத்த அரசியல்வாதி. சிறந்த தலைவர்.


எனினும், அவர் தலைமையிலான தற்போதைய அரசில் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க நான் தயார் இல்லை.


எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் எவரும் முரண்படவும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவனுடைய முன்னைய பேச்சுக்களையும் தற்போது கூறும் வார்த்தைகளையும் பாருங்கள். இவன் அரசியல் செய்தால், நாடு நிச்சியம் இலங்கை என்பதை உலகப்படத்தில் இ்ருந்து நீக்கிவிடுவார்கள். பேசினால் பொய், வாய் திறந்தால் பொய் வாக்குறுதி, படுபொய்,எங்கே யாரிடமிருந்து கொமிசன் அடிக்கலாம்.எந்தப் பெண்ணைக் கெடுக்கலாம் என்பது மாத்திரம் சிந்தனையில் இருக்கும் இவன் போன்ற கூட்டம் தான் சீ சீ அந்தப்பழம் புளிக்கும் எங்களுக்கு வேண்டாம், தந்தாலும் நாம் நுகர்ந்து பார்ப்பதுமில்லை என தற்போது வெட்கம் கூச்சம் எதுவுமின்றி உளரும் இவனுடைய பேச்சைப் பாருங்கள். இது போன்ற சக்கி.... கூட்டத்தை முற்றாக நாட்டை விட்டு ஒதுக்கிவிட அரகலய இளைஞர்கள் முயற்சி செய்தார்கள். அவர்களின் பணி தொடர்ந்தால் இது போன்ற கூட்டம் பொதுமக்களை மாடாக்குவதைக் கொஞ்சம் நிறுத்தலாம்.

    ReplyDelete

Powered by Blogger.