Header Ads



மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை


உரிய நடைமுறைக்கு மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். 


பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இன்று  முற்பகல் எல்லே  குணவங்ச தேரரை சந்தித்தார். 


இதன்போது, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையிடம் இருந்து  உறுதியான முன்மொழிவுகள் எவையும் கிடைக்கப் பெறவில்லை எனவும் ஊடகங்கள் மூலமே அறிந்ததாகவும் ஜனக்க ரத்நாயக்க, எல்லே  குணவங்ச தேரரிடம் குறிப்பிட்டார். 


மின்சார சபையினால் முன்மொழிவு  கிடைக்கப் பெற வேண்டும்.  அந்த முன்மொழிவு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த தரவைப் பயன்படுத்தி மின் கட்டணத்தை திருத்த வேண்டும். இம்முறை அதிகாரம் அமைச்சரவைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து உத்தரவைப் பெற்றுக்கொள்ளும் முறைமை காணப்படுகின்றது. அமைச்சரவை  அல்லது வேறு எங்கிருந்தாவது அத்தகைய யோசனை முன்வைக்கப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை . தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க  வேண்டுமாயின், மின்சார கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் அல்லது மின்வெட்டிற்கு செல்ல நேரிடும் என அமைச்சர் கூறுகின்றார். இது நியாயமான வாதம் இல்லை


எனவும் ஜனக்க ரத்நாயக்க, எல்லே  குணவங்ச தேரரிடம் கூறினார். 

1 comment:

  1. பொதுமக்களை ஏமாற்றி மக்களின் பணத்தைச் சூறையாடி கமிசன் அடிக்கவும்,அந்த நாடகத்தை சரியாக அரங்கேற்றவும் என்னவகையிலான ஏற்பாடுகளும், வடிவங்களும் அரங்கேருகின்றன என்பதை பொதுமக்கள் விளங்கிக் கொள்ளாது, அரசாங்கம் என்பது எங்கேயோ இருக்கின்றது, அது மக்களை ஏமாற்ற முனைகின்றது என படங்கள் காட்டி மக்களைச் சூறையாட முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சூழ்ச்சிகளை கடவுள் நன்றாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார். மக்களை ஏமாற்ற முனைபவர்கள் இறுதியில் இழிவையும் அவமானத்தையும் விரைவாக சந்திக்க நேரிடும் என்பதையும் அதற்கு மிகச் சிறந்த உதாணமாக கோவிட்டில் காலம் சென்ற முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய விடாது தடுத்து முஸ்லிம்களையும் உலக அபிப்பிராயத்தையும் துச்சமாக மதித்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி உலக வாழ் முஸ்லிம்களின் வெறுப்பையும் சாபத்தையும் பெற்றுக் கொண்ட ஆசு மாரசிங்க தற்போது நாயுடன் உடலுறவு கொண்டதாக அவருடைய நண்பர்களும் காதலிகளும் உலகுக்கு பகிரங்கப்படுத்தி அவர் தற்போது எதிர்நோக்கியுள்ள இழிவும் அவமானமும் வெறும் ஆரம்பம் மட்டும்தான் இதன்பிறகு நடைபெறுபவற்றை பொறுமையாக இருந்து இந்த நாட்டு மக்களும் உலக மக்களும் அவதானிப்பார்கள். இந்த கேவலம் ஒரு மனிதனுக்கு வரவே கூடாது என எமது ஆன்மா கூறுகின்றது. ஆனால் உலக மக்களின் மனதைப் புண்படுத்திய ஒரு இறைநிராகரிப்பாளனுக்கு உலகிலும் மறுமையிலும் சரியான தண்டனையை வழங்குவதற்கு மிகவும் நீதியானவன் அந்த இறைவன் மாத்திரம்தான் என்பதையும் இந்த நாட்டுமக்களும் உலகமக்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.