Header Ads



“பொறுமையாக இருக்குமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”


2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதகமான வரவு செலவுத் திட்டம் என்பதால் எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நேற்று (11) பிற்பகல் அனுராதபுரம் விகாரைக்கு சென்ற அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


“இது ஒரு நேர்மறையான பட்ஜெட் என்று நான் நினைக்கிறேன். பட்ஜெட்டில் இருந்து எதிர்பார்த்த நிவாரணம் எதிர்காலத்தில் கிடைக்கும்.”


கேள்வி – தேர்தல் வருமா?


“ஒரு தேர்தல் வந்தால் அதற்கு தயாராகி விடுவோம். இன்னும் அப்படி ஒரு நம்பிக்கை இல்லை. நிறைய நேரம் இருக்கிறது.”


கேள்வி – மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் ?


“பொறுமையாக இருக்குமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” TL

1 comment:

  1. நாட்டைக் காபாஸினாவாக்கி, திவாலாக்கி, மக்களை பஞ்சம் என்ற படுபாதாளத்தில் தள்ளி, நாட்டை வங்கரோத்து நிலையை அடைந்த நாடாக பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்த இந்த நாக்கி மீஹரக்கிடம் இனியும் இந்த நாட்டு மனிதர்கள் பாடம் கற்றுக் கொள்ள ஏதும் இருந்தால், அவனிடம் தான் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த நாட்டுக்கும் வெனிசுவேலாவுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அதைச் சரியாக விளங்கியதன் காரணமாகத்தான் ஆயிரக்கணக்கான டாக்டர்கள் , ஆண்,பெண் தாதிகளாகப் பணிபுரிய வௌிநாடு செல்கின்றனர். சாதாரண மனிதர்கள் கூட என்ன சம்பளம் கிடைத்தாலும் சரி இங்கிருந்து தொலைந்துவிடுவோம் என வௌிநாடு செல்கின்றனர். இந்த அநியாயத்தை கூறுவதற்கும், அதற்கான பரிகாரத்தைத் தேடுவதற்கும் எந்த வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.