ரோஹிங்கிய அகதிகளை மீட்ட இலங்கை கடற்படைக்கு ஐ.நா. பாராட்டு - சகல நாடுகளும் பின்பற்றவேண்டிய மனிதாபிமான உதாரணம் என வர்ணிப்பு
இந்நிலையில் இலங்கை கடற்படைக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி உடையவர்களாக உள்ளோம் என ஆசிய பசுபிக்கிற்கான யு.என்.எச்.சி.ஆரின் இயக்குநர் இந்திக ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது கடலில் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டிய மனிதாபிமானத்திற்கான உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடனடி தேவைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு யு.என்.எச்.சி.ஆர் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது.
படகுகளில் ஆபத்தில் சிக்குண்டுள்ளவர்கள் கடலில் மிதப்பவர்களை காப்பாற்றுவதற்கு அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளும் முன்வரவேண்டும் என அகதிகளிற்கான ஐ.நாவின் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச கடப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பாரம்பரியங்களின் அடிப்படையில் அவர்கள் தரையிறங்குவதற்கும் அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. tw
Post a Comment