காற்சட்டையுடன் களத்தில் குதித்து, உயிர்களை மீட்கப் போராடிய மருத்துவர் (படங்கள்)
பதுளை பெ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான மருத்துவ அதிகாரி பாலித ராஜபக்ஷவே இந்த பணியை செய்துள்ளார் . கவலைக்கிடமான நோயாளர்கள் மூவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற அழைப்பின் பேரில் குறித்த மருத்துவர் உடனடியாக அங்கு சென்றுள்ளார் .
அவர் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றதன் காரணமாக தனது மூக்கு கண்ணாடியையும் மறந்துவிட்டு வந்ததுடன் , பிறிதொருவரின் கண்ணாடியை தேவைக்காக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
எவ்வாறாயினும் , மருத்துவ பணிக்காக அணியும் ஆடைகளை அணிவதற்கான நேரத்தையும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர் செலவிட்டுள்ளார் . நோயாளிகளின் தேவை கருதி உடனடியாக வீட்டில் இருந்தவாறு கட்டைக் காற்சட்டை மற்றும் மேலாடையுடன் தான் மருத்துவமனைக்கு சென்றதாக அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .
“ ஆடையா ??? கற்றறிந்த தொழிலா ?? ஒரே நேரத்தில் மூன்று ஆபத்தான நோயாளிகள் . தம்பி சமீரவிடமிருந்து அண்ணா உடனடியாக வா ” என்று அதிகாலையில் அவசர அழைப்பு,
எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை . மூக்குக் கண்ணாடி கல்பகே தம்பியுடையது . கடமையை நிறைவேற்றுவது மட்டுமே எனது தேவை என்னால் முடிந்ததைச் செய்தேன் . கட்டை காற்சட்டை பிரச்சினை இல்லை . அப்போ ஆடை ????? இது தீவிரமானது அல்ல கடமையை செய்வதற்காக மட்டுமே ! " என்று பதிவிட்டிருந்தார் .
இந்த டாக்டரின் சேவையை நாம் மனமாரப் பாராட்டுகின்றோம். அவர் தன்னுடைய பணிக்கு மேல் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர் என்பது நன்றாகத் தெரிகிறது. காலில் குழியலறைக்குப்பாவிக்கும் காலணியுடன் ஓடோடிவந்து நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தியாகத்துடன் செயல்படுபவர். அவர் போன்று ஆயிரமாயிரம் டாக்டர்கள் இந்த நாட்டில் உருவாக எமது கனிவான பிரார்த்தனைகள்.
ReplyDelete