Header Ads



கண்டி நகருக்கு இப்படியொரு பரிதாபமா..?


கண்டி நகரில் முச்சக்கரவண்டி சாரதிகளின் சட்டவிரோத மற்றும் மோசடி செயற்பாடுகளால் இந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் என தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

பல வெளிநாடுகளில் கண்டி நகரம் தொடர்பில் நல்ல அபிப்பிராயம் இல்லை எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.


கண்டி ஈ.எல். சேனாநாயக்க நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்


கண்டி இருளாகவும், அழுக்காகவும், பாதுகாப்பற்றதாகவும், போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்கள் அதிகம் உள்ள நகரம் எனவும் நெதர்லாந்து உட்பட பல நாடுகளின் தூதரகங்கள் கண்டி சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிவித்துள்ளன. குறிப்பாக கண்டி நகருக்கு சுற்றுலா பயணிகள் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நகரில் பல முச்சக்கரவண்டி சாரதிகள் ஊழல் மற்றும் நியாயமற்ற நடத்துனர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.


உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை பின்தள்ளி கண்டியின் தலதா மாளிகை இணையத்தில் முதலிடத்தை எட்டியுள்ளது. நாம் தலதாவை வாழும் புத்தராகக் கருதுகிறோம். உலக பாரம்பரிய நகரமாக இருந்த கண்டி நகருக்கு இந்த நிலை வந்துள்ளதற்கு நாம் அனைவரும் வருந்த வேண்டும்.


கண்டியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இருந்தாலும், எண்ணூறு மட்டுமே உரிமம் பெற்றுள்ளது. ஏனைய மாகாணங்களுக்கு விஜயம் செய்த வெளிநாட்டவர்கள் அந்த மாகாணத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் சேவை மற்றும் நேர்மையைக் கண்டு அவர்களுக்கான வீடுகளையும் கட்டிக் கொடுத்த வரலாறு உண்டு . ஆனால் சில வெளிநாடுகள் கண்டி நகருக்குச் சென்றால் முச்சக்கரவண்டிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கின்றன . இதனை மிகவும் சோகமான நிலையாகவே நாம் பார்க்கின்றோம். இந்த நிலையை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன. முச்சக்கர வண்டி சாரதிகள் மிகவும் சட்டவிரோதமான முறையில் நடந்து கொள்கிகின்றனர். உரிமம் பெற்ற முச்சக்கர வண்டிகளுக்கு தனி வண்ணம் அல்லது தனி அடையாள பேட்ஜ் வழங்குவதன் மூலமும், ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்குவதன் மூலமும், அந்த முச்சக்கர வண்டிககள் மூலம் சிறப்பான சேவை வழங்குவதை உறுதி செய்வோம்.


நகரில் பல இடங்களில் இரவில் இருளில் மூழ்கி கிடப்பதாக புகார்கள் வருகின்றன. அடுத்த வருடம் நகரின் வர்த்தகர்களின் பங்களிப்புடன் நகரை ஒளிமயப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பெரும்பாலான ஊடகங்கள் கண்டி நகரம் பற்றி மோசமான செய்திகளையே வெளியிடுகின்றன. இதுவே இந்நிலைமைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கூறியதாவது: நகரில் மோசடி, ஊழல், குண்டர்கள், குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்வதா கவும், ஊடகவியலாளர்கள் எப்போதும் பொதுமக்களின் நலனுக்காகவே செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.


நன்றி – அருண

No comments

Powered by Blogger.