Header Ads



முன்மாதிரியாக செயற்பட்ட கணக்காளர்


தான் கண்டெடுத்த நகை பார்சலை காவல்துறையிடம் ஒப்படைத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார் கணக்காளர் ஒருவர்.அவரின் இந்த செயலை காவல்துறை அதிகாரி பாராட்டியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


மொனராகலை கல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம். லக்மால் தயாரத்ன என்பவர் மொனராகலை நகர சந்தைப் பகுதிக்கு அருகில் நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தங்க நெக்லஸ்கள், மோதிரம் மற்றும் பதக்கங்கள் அடங்கிய தங்கப் பொதி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.


மொனராகலை நகரிலுள்ள நிதி நிறுவனமொன்றில் கணக்கியல் பிரிவில் கடமையாற்றும் இவர், நேற்று (21) பிற்பகல் தனது சொந்த தேவைக்காக நகரத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது, நகரின் கடையொன்றிற்கு அருகில் இந்த தங்கப் பொதி கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளார்.


உடனடியாக மொனராகலை காவல் தலைமையகத்திற்குச் சென்று பிரதான காவல்பரிசோதகர் P.S.C சஞ்சீவவைச் சந்தித்து அவர் அறிவுறுத்தலின் பேரில் பொருட்களை மொனராகலை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.


இவ்வாறான இக்கட்டான நேரத்தில் லக்மால் தயாரத்னவின் செயற்பாடு முழு சமூகத்திற்கும் முன்னுதாரணமானது, உங்களின் சிறந்த செயலை நாங்கள் முழு மனதுடன் பாராட்டுகிறோம் என காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.   IBC

1 comment:

  1. இந்த கணக்காளரைப் பொதுமக்கள் சந்தித்து தனிப்பட்ட ரீதியிலும் குழு, நிறுவன அடிப்படையிலும் அவரைச் சந்தித்து அவர்களின் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். அது இந்த சமுதாயத்தின் கடமை. அவருடைய மனத்துய்மையின் பிரதிபலிப்பு தான் அந்த சிறப்பான நடத்தை. அதுமட்டுமன்றி அவருடைய நேர காலங்களை ஒதுக்கி பொலிஸுக்குச் சென்று அவற்றை ஒப்படைப்பது என்பது மிகப் பெரிய தியாகமும் கூட. அடுத்தபக்கமாக அந்த இழந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பது இந்த சமூகத்துக்குரிய கேள்விக்குறி. எது எப்படியானாலும் இந்த கணக்காளரைப் போல அனைவரும் மனத்துய்மையுடன் நடந்து கொண்டால் இந்த பூமி அனைவருக்கும் சுவர்க்கமாகவும் அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.