Header Ads



யாரோ செய்த தவறினால் கோட்டாபய வீட்டுக்குச் செல்ல நேரிட்டது, ரணிலுக்கு அவகாசம் வழங்க வேண்டும், தேர்தல் நடத்தக் கூடாது


நாட்டைக் கட்டியெழுப்ப சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த தேசம் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து மீளக் கொண்டுவர கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். ஆனால் யாரோ செய்த தவறினால் அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது.


அதற்கு யார் பொறுப்பு என்று தெரியவில்லை. ஆனால் தற்போதைய அதிபர்  ரணில் விக்ரமசிங்க நாட்டை அதல பாதாளத்தில் இருந்து மீட்டெடுக்க முன்வந்தார்.


அந்த சவாலை ஏற்று படிப்படியாக நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு இன்னும் சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.


நாடு தற்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். இந்த நேரத்தில் அதை செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். ibc

1 comment:

  1. இந்த மஞ்சல் போர்த்திய நபர் மிகவும் சுயநலவாதி,பேராசைப் பித்தன், நல்லதைச் சொல்லி பொதுமக்களை வழிகெடுக்கும் பேர்வழி,நாட்டைக் குட்டிச்சுவராக்கும் பணியில் பிரதான பங்காளி, கோடாவுக்கு வக்காளத்து வாங்கி தனக்கு எந்தவகையிலும் தகுதியில்லாத, கல்விப் பொதுத்தராதரப் பரீட்சை எழுதாத இந்த நபர், கோதாவின் சிபார்சின் பேரில் நாட்டின் மிகப் பெரிய கல்வி கழகம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு கல்வித்துறையில் துறைபோன அறிஞர்கள், பேராசிரியர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டால் கல்விக்கு கோதாவும் இந்த நபரும் அழிவையும் கேவலத்தையும் கற்றவர்களுக்கு அவமானத்தையும் கொண்டுவந்தவர். இப்போது தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள ரணிலுக்கு வக்காளத்து வாங்க ஆரம்பித்திருக்கின்றார். இந்த இரகசியங்கள் இந்த நாட்டு மக்களுக்குப் புரியாமைதான் நாட்டின் மிகப் பெரிய இழப்பும் அவமானமுமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.