ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வரி குறைவாகவே உள்ளது
இலங்கையின் வரி முறைமை கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்ட போதிலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் வரி தொடர்ந்தும் குறைவாகவே உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.
லாவோஸ், மியன்மார் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் பொருளாதார பின்னடைவை கொண்டுள்ள போதிலும் குறித்த நாடுகளில் வரி விகிதாசாரம் இலங்கையை விட அதிகமாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கை பொருளாதார பின்னடைவைக் கொண்டுள்ள 34 இலட்சம் குடும்பங்களை பராமரிக்கும் நிலையில் அரசாங்கம் உள்ளது.
இதுதவிர, பல்கலைகழகம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச கல்வி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக கணிசமான நிதியை வருடாந்தம் ஒதுக்கிட்டுள்ளது.
இந்த நிலையில் எமது நாட்டில் வரி தொடர்ந்தும் குறைவாகவே உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment