Header Ads



எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கின்றேன்


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சிலர் ஆரம்பத்தில் இருந்தே கட்சியில் இருந்து விலக வேண்டும் என தீர்மானித்து இருந்தவர்கள். ஏனையோர் அப்படியான தீர்மானத்தில் இருக்கவில்லை. வேறு கட்சிக்கு சென்று அமைச்சு பதவிகளை பெற வேண்டும் என எதிர்பார்ப்பு சிலருக்கு இருக்கவில்லை.


மைத்திரிபால சிறிசேனவை எடுத்துக்கொண்டால், நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்ததுடன் எமது கட்சியின் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.


அவை அப்படித்தான். கட்சியில் இருந்து சென்றவர்கள் மீண்டும் சிந்தித்து பார்க்குமாறு நான் கேட்கிறேன். சென்றவர்கள் அனைவரும் மிகவும் வசதியான இடம் மொட்டுக்கட்சியே எனவும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.


அதேவேளை விமல் வீரவங்சவுடன் மீண்டும் பயணம் ஒன்றை ஆரம்பிக்க நான் ஆசையுடன் இருக்கின்றேன். நாட்டுக்காக இந்த இணைப்பு நடக்க வேண்டும். எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கின்றேன் எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த நாட்டில் வாழும் மக்கள் பொதுவாக பச்சமடையர்கள் இல்லை. அப்படியானவர்களை அமு மீஹரக் என நாட்டவர்கள் கூறுவார்கள். அத்தகைய அமு மீஹரக் இனத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர எந்த சாதாரண மனிதனும் இந்த கொள்ளைக்காரனின் பேச்சை கேட்கவோ நம்பவோ மாட்டார்கள். ஆனால் அந்த நிலைப்பாட்டை இந்த மீஹரக் ஒருபோதும் புரிந்து கொள்ளாது. ஏனெனில் அவன் தனியான ஒரு மீஹரக்.

    ReplyDelete

Powered by Blogger.