தீர்மானமிக்க வாக்கெடுப்பு இன்று
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (08) நடைபெறவுள்ளது.
குழுவின் விவாதம் இன்றுடன் நிறைவடைந்து
மாலை 05.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதியமைச்சராக கடந்த நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்றதையடுத்து, இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு 22ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.
அங்கு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 84 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
Post a Comment