வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவை செயற்படுத்த பாதுகாப்புத் துறையினரை சேவையில் ஈடுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் செயற்படவேண்டும் என்பதற்காக வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசிகளை வெளியில் வைத்துவிட்டு செல்லும் வகையில், பாதுகாப்பான இட வசதிகளை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையடக்க தொலைபேசி பாவனையினால் மக்களின் கவனம் சிதறடிக்கப்படுவதாகவும் ஆலயங்களில் படங்கள் எடுப்பது ஆகம விதிகளுக்கு முரணானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது என கூறப்பட்டுள்ளது.
Post a Comment