Header Ads



போதைப்பொருள் மாபியாக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகிறது - சஜித்


கல்வி ரீதியான சமூக பாகுபாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும்,இலங்கையை கல்வியின் கேந்திர நிலையமாக மாற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


நாடு கல்வியின் சொர்க்கமாக மாறுவதை விடுத்து போதைப்பொருள் சொர்க்கமாக மாறியுள்ளதாகவும்,போதைப்பொருள் மாபியாக்களுக்கு அரசாங்கம் அஞ்சுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு நாட்டின் நீதித்துறை மிகவும் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என தெரிவித்த

எதிர்க்கட்சித் தலைவர்,இவ்வாறு நீதித்துறையை சுயாதீனமாக்குவதன் ஊடாகவே போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.


நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 48 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை மாத்தளை நாவுல ஸ்ரீ நாக தேசிய பாடசாலைக்கு இன்று(21) அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.