வேலுகுமார் எந்தப் பக்கம் சாயப் போகிறார்..?
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நேற்று (08) நடைபெற்றது. அதனை வேலுகுமார் புறக்கணித்திருந்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருந்த நிலையில் கட்சியின் தீர்மானத்தை மீறி செயல்பட்டமைக்கு எதிராக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்க தீர்மானித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment