அமெரிக்கத் தூதுவருடன் றிசாத் சந்திப்பு, முஸ்லிம் விவகாரம் பற்றி பேச்சு - ஐ.நா. பிரதிநிதியுடனும் கலந்துரையாடல்
இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் அவற்றிலிருந்து மீண்டெழுவதற்கான வழிவகைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், சர்வதேச முகவராண்மைகளின் ஆதரவுடன் முன்னோக்கி செல்லும் முறைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இதேவேளை, ஐ.நா வதிவிடப் பிரதிநிதி இலங்கைக்கு ஆற்றிய அளப்பரிய பணிகளுக்கு நன்றியினை தெரிவித்த ரிஷாட் எம்.பி, தனது சேவைக்காலத்தை நிறைவு செய்யவுள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
இதேவேளை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடனும் றிசாத் பதியுதீன் நேற்று புதன்கிழமை பேச்சு ஒன்றி ஈடுபட்டுள்ளார். இதுபற்றி அமெரிக்கத் தூதுவர் டுவிட்டர் பதிவொன்றையும் பகிர்ந்துள்ளார்.
அதில், Today, I met with @rbathiudeen
to explore the unique concerns of Muslims in Sri Lanka as the government takes important reform steps forward to the country.
Post a Comment