கைப்பற்றப்படும் போதைப்பொருள், கோதுமை மாவாக மாறும் விநோதம்
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரம், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கான பாதீட்டு ஒதுக்கீடு தொடர்பான இன்றைய குழுநிலை விவாத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சோதனைகளின்போது கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை மீண்டும் சந்தைக்கு வந்து மக்கள் கைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று பொருளாதாரம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நாம் குறைவாக பேசினாலும், போதைப்பொருட்கள் என்ற விடயத்தினால் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படுகிறது.
தற்போது, 5 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
கடந்த காலங்களில் ஐஸ் ஆபத்தான போதைப்பொருள் என்ற பட்டியலில் இருக்கவில்லை. இன்று ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும்படி, கடந்த மாதம் சட்டம் திருத்தப்பட்டது.
பொலிஸாரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள், வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே மீண்டும் சந்தைக்கு வருகின்றன. சான்று பொருட்களாக, பொலிஸாரின் சான்று அறைக்கு செல்லும் போதைப்பொருட்கள், கோதுமை மாவாக மாறும் நிலையில் போதைப்பொருட்கள் மீண்டும் சந்தைக்கு வந்து மக்கள் கைகளை அடைகின்றன.
கைப்பற்றிய போதைப்பொருட்களை மக்களுக்கு விற்றவர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, குறித்த பொருளை கைப்பற்றியவுடன் விசாரணைக்கு தேவையான அளவை மாத்திரம் வைத்துக்கொண்டு, மிகுதியை அழிப்பதற்கு சட்டத்திருத்தம் ஊடாக நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். tkural
சட்டம் ஒழுங்காகச் செயற்படவில்லை. போதைப் பொருட்கள் ஆய்வுகூட பரிசோதனையின் பின்னர் கோதுமை மாவாக மாறும் அளவுக்கு இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சிதறி அல்லது சிதறவிட்டு அதைச் சட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சரே விமர்சிக்கும் அளவுக்கு சட்டம் கீழ் சென்றுவிட்டால் அந்த அமைச்சுப் பதவியில் இவர் தொடர்வது அவமானமில்லையா? அதுகூட இந்த கலாநிதிகளுக்கு புரிந்து கொள்ள முடியாதநிலை இந்த நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.
ReplyDelete