இவரின் வரலாற்றை நீங்கள் படித்தால், உலகம் கண்ட தலைசிறந்த தலைவர் என்பதை தெரிந்து கொள்வீர்கள்...
புத்தகத்தை எழுதி முடித்த அவர், லண்டனில் ஆற்றிய உரை ஒன்றில் நீண்ட வாதப் பிரதிவாதங்கள் மற்றும் கடும் விமர்சனங்களுக்கும் பிறகு முதல் இடத்தைப் பிடித்த தலைசிறந்த ஆளுமை பற்றிய ஒரு அற்புதமான தகவலை தெரிவித்தார்:
'நீங்கள் ஆற்சேபிக்கும் அந்த மாமனிதர் ஒரு நாள் மக்கா என்ற சிறிய கிராமத்தின் தெருக்களில் எல்லாம் தான் இறைவனிடமிருந்து வந்த தூதர் என்றார், தான் வந்த நோக்கம் தார்மீக பண்பாடுகளை முழுமைப்படுத்தான்' என்றார். அவரது துணைவி, தோழர் ஒரு சிறுவன் என மூன்று பேர் மாத்திரம்தான் அவர் சொன்னதை முதலில் நம்பினார்கள்.
இப்போது 1400 வருடங்கள் கடந்தும் கூட அவரை நம்பும் 200 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். நாளுக்கு நாள் அவரை ஏற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர் ஒரு பொய்யராக இருக்க எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில் ஒரு பொய் 1400 ஆண்டுகளுக்கு மேலாக வாழ வாய்பே இல்லை. இவ்வளவு நீண்ட காலமாக 200 கோடிக்கும் அதிகமான மக்களை ஏமாற்ற ஒருவராலும் முடியாது.
இந்த மனிதரின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் படித்தீர்களானால், இந்த மண்ணுலகம் கண்ட தலைசிறந்த தலைவர் முஹம்மத்தான் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment