Header Ads



செல்வந்தர்களிடம் இருந்து பெற்று பாடசாலைகளுக்கு பேருந்து, கணினிகள், மருந்துகள் வழங்குகிறேன் - சஜித்


ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக எதுவும் செய்யாதபோது, ​​​​ஐக்கிய மக்கள் சக்தி செல்வந்தர்களுடன் தொடர்பு கொண்டு பாடசாலைகளுக்கு பேருந்துகள்,கணினிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வழங்கும் போது வறியவர்களுக்காக முன்நிற்பதாகக் கூறிக்கொள்ளும் நாட்டின் மிகப்பெரிய சோசலிச கட்சி கடும் விமர்சன போக்குடன் பஸ் சாரதிகள் ஜனாதிபதி ஆக முடியுமா என  இழிவான முறையில்  கருத்து தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


இவர்கள் இளைஞர்களை பயன்படுத்தி உண்டியல்கள் ஆட்டி கோடிக்கணக்கில் பணம் சேகரித்து ஆடம்பரமான கட்சி அலுவலகத்தை நிர்மானித்து மகிழ்ச்சியில் மூழ்கி,அப்பாவி மக்களை மறந்து செயற்படுவதாகவும் இவர்கள் பிரபு வர்க்க சோசலிசவாதிகளாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (30) தெரிவித்தார். 


பாடசாலைகளுக்கு பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தைக் கண்டு இவர்கள் பொறாமை கொள்வதாகவும், பின்தங்கிய  மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் மூலம் ஓரளவுக்கு பலம் பெற்றால் கபட அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போல் நடந்து கொள்வார்கள் என அவர்கள் பொறாமை கொள்வதாகவும்,இந்த சோசலிச தலைவர்கள் பிரபு வார்க்கத்தினர் அணியும் மிகவும் மதிப்புமிக்க ஆடைகளை அணிந்த வண்ணம் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களை விமர்சனம் செய்வதாகவும்

வேலை செய்யும் திறனும், தொடர்புகளும் அவர்களுக்கு  இல்லாத காரணத்தினால் இவ்வாறு விமர்சனம் செய்வதாகவும், இவர்கள்   வேலை செய்ய இயலாத டாசன்களாக  சேவை செய்யும் நபர்களின் பயணத்துக்குத் குந்தகம் விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 


ஆனாலும் இந்த பிரபஞ்சம் மற்றும் மூச்சு வேலைத்திட்டம் விமர்சனங்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு மத்தியில் வலுவான பயணத்தை மேற்கொள்வதாகவும், இதனை யாராலும் தடுக்க முடியாது எனவும் எதிர்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 55 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று 

ஹக்மன ஊருபொக்க தேசியப் பாடசாலைக்கு இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.


தொங்கு பாலத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவதாக கூறினாலும், ராஜபக்சவினர் மாத்திரமே தொங்கு பாலத்தில் இருந்து வெளியே வந்ததாகவும், அப்பாவி மக்கள் தொங்கு பாலத்தில் இருந்து பாதாளத்தில் வீழ்ந்து விட்டதாகவும், இதனால் நாட்டு மக்கள் மரணத்தின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும் யுகத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.


எமது நாட்டில் தற்போது அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் உரிமை இல்லை எனவும், அவர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் பிரகாரம் அதனை எதிர்கொள்வதை விடுத்து அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த  எதிர்க்கட்சி தலைவர், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக முன்நிற்க நாம் அனைவரும் ஒன்றாக எழுச்சி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.