Header Ads



இரட்டை பிரஜாவுரிமைக்காக இலங்கையில் குவியும் விண்ணப்பங்கள்


கடந்த 2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கை விண்ணப்பங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் எனவும், அந்நாட்டு பிரஜாவுரிமை பெற்றுள்ள 1,621 பேர் இவ்வாறு விண்ணப்பித்துள்ளதாகவும்  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் 885 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேர், கனடாவைச் சேர்ந்த 371 பேர் மற்றும் இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூஸிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறு அந்தந்த நாடுகளில் குடியுரமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


2021ஆம் ஆண்டில் 382,560 கடவுச்சீட்டுகள் விநியோகம்


இதில் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் 398 உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இது 2020 ஆம் ஆண்டிலும் பார்க்க அதிகமாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


2020 ஆம் ஆண்டில் 209,411 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 175 இராஜதந்திர கடவுச்சீட்டுகள் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.